/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனஅழுத்தத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்: தற்கொலையை தடுக்க 'டிப்ஸ்'
/
மனஅழுத்தத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்: தற்கொலையை தடுக்க 'டிப்ஸ்'
மனஅழுத்தத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்: தற்கொலையை தடுக்க 'டிப்ஸ்'
மனஅழுத்தத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்: தற்கொலையை தடுக்க 'டிப்ஸ்'
ADDED : செப் 11, 2024 12:32 AM
மதுரை: ''மனஅழுத்தம் இருந்தால் நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள தயங்கக்கூடாது. அதன் மூலமே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட முடியும்'' என மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் கீதாஞ்சலி தெரிவித்தார்.
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறை சார்பில் தொடர் கல்வி கருத்தரங்கு நடந்தது.
டீன் பொறுப்பு செல்வராணி பேசுகையில், ''சிறிய தோல்விக்கு பயப்படாமல் அடுத்து என்ன செய்வது என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும். பெற்றோரும் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளுக்கு மனஅழுத்தம் தரக்கூடாது, அதிகம் எதிர்பார்க்கவும் கூடாது'' என்றார்.
துறைத்தலைவர் கீதாஞ்சலி பேசியதாவது: தற்கொலை எண்ணம் உள்ளவர்கள், மனநோய் பிரச்னை உள்ளவர்கள் வெளியே சொல்லிவிடுவர். மனநலப் பிரச்னையை வெளியே சொல்வது கேவலம் என நினைக்கக்கூடாது. மனநல பிரச்னை இல்லாதவர்கள் திடீர் மனஅழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். மனஅழுத்தம் இருந்தால் நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசும் எண்ணம் வரவேண்டும். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அந்த எண்ணத்தில் இருந்து விடுபட முடியும்.
தேசிய குற்ற ஆவண காப்பக ஆய்வின் படி இந்தியாவில் இந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் தமிழகம் முதல் 5 மாநிலங்களுக்குள் உள்ளது. 2022 கணக்கீட்டின் படி ஒரு லட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்கின்றனர். மனஅழுத்தம், வேலைப்பளு, உறவுகளில் பிரச்னை, உடல்நலம் போன்றவை காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன என்றார்.
கருத்தரங்க அமர்வுகளில் டாக்டர்கள் சண்முகப்ரியா, கிருபாகர கிருஷ்ணன் பேசினர். துணை முதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ., க்கள் முரளிதரன், சரவணன், பேராசிரியை அமுதா பங்கேற்றனர்.