/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடிப்பெருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஆடிப்பெருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஆக 01, 2024 11:31 PM

மதுரை : நாளை (ஆக.3) ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று (ஆக.2) முதல் ஆக.4 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மதுரை கோட்ட பகுதியில் இருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில், ராமேஸ்வரம், குச்சனுார் சனிபகவான் (தேனி, போடி, சின்னமனுார், கம்பம்), அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் (உசிலம்பட்டி, வத்தலகுண்டு, நிலக்கோட்டை) பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
போக்குவரத்தை கண்காணிக்க, பயணிகளுக்கு வழிகாட்ட முக்கிய நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மேலாண்மை இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.