ADDED : செப் 27, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
மதுரை, செப்.28-
மதுரை எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் ஆனையூரில் நடந்தது.
ஆனையூர் பகுதி போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், முதியோர் இல்லத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. எம்மால் இயன்றது அமைப்பின் நிறுவனர் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார். என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர்கள் கிருஷ்ணன், சாம்ராஜ், ஹாரீஸ், திட்ட அலுவலர் அழகர் ராஜ், வீ த லீடர்ஸ் இயக்க நிர்வாகி மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர்.
