தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குரூப் 1 தேர்வில் 25 சதவீதம் ‘ஆப்சென்ட்’

குரூப் 1 தேர்வில் 25 சதவீதம் ‘ஆப்சென்ட்’

குரூப் 1 தேர்வில் 25 சதவீதம் ‘ஆப்சென்ட்’


ADDED : செப் 27, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.,சி., குரூப் 1 முதன்மை தேர்வில் 25 சதவீதம் பேர் ‘ஆப்செனட்’ ஆகினர்.

மதுரையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு நேற்று நடந்தது. துணை கலெக்டர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், தொழிலாளர் நல உதவிகமிஷனர் உட்பட 46 காலியிடங்களுக்கான இத்தேர்வு நேற்று நடந்தது. காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடந்தது.

இதையொட்டி மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, யாதவர் பெண்கள் கல்லுாரி, பரவை மங்கையர்க்கரசி கல்லுாரி உட்பட 28 இடங்களில் 45 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தேர்வில் மதுரையில் பங்கேற்க 13 ஆயிரத்து 61 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்வை கண்காணிக்க 3 பறக்கும் படையினர், 11 நடமாடும் குழுக்கள், 45 ஆய்வாளர்கள், 46 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இத்தேர்வில் 9826 பேர் நேற்று பங்கேற்று எழுதினர். 3235 பேர் (25 சதவீதம்) ஆப்சென்ட் ஆகி இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us