ADDED : ஜூலை 10, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : சிவகங்கையில் இருந்து நேற்று காலை மேலுாருக்கு அரசு டவுன் பஸ் வந்தது.
அதில் பயணித்த 22 வயது நபர், உள்ளே வரமறுத்து படிக்கட்டில் நின்றார். இதனால் அவரை இடையமேலுார் பகுதியில் கண்டக்டர் ராமன் இறக்கிவிட்டார். ஆத்திரமுற்ற அந்நபர் டூவீலரில் பின்தொடர்ந்து வந்து மேலுார் முகமதியர்புரம் அருகே கல் வீசியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. டிரைவர் வேலாயுதத்திற்கு காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.