ADDED : ஜூலை 13, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதுகலை மற்றும் வணிகவியல் துறை உயராய்வு மையம் முதுகலை வணிகவியல் மன்றம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறை தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவர்கள் தர்மராஜ், காளீஸ்வரி அறிமுக உரையாற்றினர். அழகர்சாமி, சுரேஷ் சீனிவாசன் பேசினர். பேராசிரியர்கள் அற்புதராஜ், தேவிகா, கீதா, கோதை நாச்சியார், ராதிகா, பாலசத்தியா, கஜ பிரியா, சாய் மோகனா ஒருங்கிணைத்தனர். மாணவி நிஹாசினி நன்றி கூறினார்.
