ADDED : ஆக 13, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையார் சி.பி.எஸ்.இ., பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
தேசியக்கொடி ஏற்றுதல், தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த ஊர்வலம் பள்ளியில் இருந்து நெடுமதுரை வரை நடந்தது. முதல்வர் சூர்யபிரபா துவக்கி வைத்தார். என்.சி.சி., திட்ட அதிகாரி மாணிக்கம் மாணவர்களை வழிநடத்தினார். சுதந்திரத்தின் அருமையையும், அதற்காக தியாகங்களை செய்த தியாகிகள் குறித்தும் இளைய தலைமுறையினர் உணர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி, ஒவ்வொரு இதயத்திலும் தேசப்பற்று என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசப்பற்றுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
