/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆனையூர் கோயிலில் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு
/
ஆனையூர் கோயிலில் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு
ADDED : ஆக 10, 2024 05:32 AM

உசிலம்பட்டி: மத்திய தொல்லியல் துறையின் கோயில் ஆய்வு திட்டம் சார்பில் தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
நேற்று தென்மண்டல தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, புகைப்படக்கலைஞர் சுகுணா, ஆய்வு மாணவர்கள் தீபக், ராமசாமி உள்ளிட்ட குழுவினர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் ஆனையூரில் உள்ள பழமையான ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
கி.பி., 9ம் நுாற்றாண்டில் இருந்து பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் காலத்திய கல்வெட்டுக்களை அவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து மேலத்திருமாணிக்கம், சோழவந்தான் தென்கரை, குருவித்துறை பகுதி கோயில்களையும் ஆவணப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என தெரிவித்தனர்.