ADDED : ஜூன் 27, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்படுகின்றன என உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது:
பயிர் சாகுபடியில் பசுந்தாள் உர பயிர்களான கொழிஞ்சி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, தட்டைப்பயறு பயிரிடும்போது கரிம சத்தின் அளவு அதிகரிக்கும். களைகள், மண்ணரிப்பை குறைத்து மறைமுகமாக நோய் காரணிகளை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக மையங்களில் வழங்கப்படுகிறது.