ADDED : ஆக 27, 2024 01:28 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் பல இடங்களில் பள்ளங்களாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் அவதியுறுகின்றனர்.
திருநகர், திருமங்கலம் வெளியூர்களில் இருந்து திருப்பரங்குன்றத்திற்குள் செல்லும் வாகனங்களும், திருநகர், திருமங்கலத்தில் இருந்து பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் நிலையங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களும் இந்த பாலத்தில் சென்று திரும்புகின்றன.
பாலத்தின் மையப் பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு பெரிய பள்ளமும், பல்வேறு இடங்களில் சிறிய பள்ளங்களும் உள்ளன. பல இடங்களில் பள்ளம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பல இடங்களில் விரிசல்கள் உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் அந்தப் பள்ளங்களில் விழுந்து காயம் அடைவது தொடர்கிறது. பாலத்தில் உள்ள பள்ளங்களை சீரமைப்பதுடன், விரிசல்களையும் சீரமைக்க நடவடிக்கை தேவை என மக்கள் வலியுறுத்துகின்றனர்.