ADDED : செப் 05, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி ; மதுரை சோளங்குருணி ரவிச்சந்திரன் சொந்த செலவில் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் நான்கு நவீன கண்காணிப்பு கேமராக்களை சோளங்குருணி பஸ் நிறுத்தம், வளையங்குளம் சாலை, குதிரை குத்தி சாலை, நல்லுார் சாலை ஆகிய இடங்களில் பொருத்தினார்.
அக்கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி., அருள் தலைமை வகித்து திறந்து வைத்தார். பெருங்குடி இன்ஸ்பெக்டர் ஜெயமணி, போலீசார், பொது மக்கள் கலந்து கொண்டனர்.