/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அயலகத் தமிழர்களின் படைப்பு களஞ்சியங்கள் தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் புகழாரம்
/
அயலகத் தமிழர்களின் படைப்பு களஞ்சியங்கள் தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் புகழாரம்
அயலகத் தமிழர்களின் படைப்பு களஞ்சியங்கள் தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் புகழாரம்
அயலகத் தமிழர்களின் படைப்பு களஞ்சியங்கள் தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் புகழாரம்
ADDED : பிப் 07, 2025 03:47 AM
மதுரை | 'அயலகத் தமிழர்களின் பல்வேறு படைப்பு களஞ்சியங்கள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம்' என உலகத் தமிழ்க் கூடல் நிகழ்ச்சியில் பேராசிரியர் பொன் கதிரேசன் பேசினார்.
மதுரையில் அயலகத் தமிழர்களின் பணிகளும், படைப்புகளும் குறித்த தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பேராசிரியர் பொன் கதிரேசன் பேசியதாவது:
உலகம் முழுவதும் தமிழ் மொழி, பண்பாடு, கருத்துகள் சென்றடைய அயலகத் தமிழர்களின் ஆற்றல் மிக்க பணிகள், படைப்புகள் காரணம். மலேசியாவில் 5 தலைமுறையாக தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கு 55 சதவீத தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.
மலேசிய பேராசிரியர் செல்வஜோதி திருக்குறளில் நிலைத் தன்மைக்கான இலக்குகள் 17' என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தை யுனஸ்கோ வளர்ச்சிக்கான இலக்காக அறிவித்துள்ளது. அயலகத் தமிழர்களின் தனித்துவமான வாழ்வியல் சான்றுகள், பணிகள் குறித்த கட்டுரை, புத்தகம், ஆராய்ச்சி என 1000க்கும் மேற்பட்ட நுால்கள் ஆண்டுதோறும் வெளிவருகிறது.
அவர்களின் முக்கிய நோக்கம் படைப்புகளின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செம்மொழிச் சங்கம், உலகத் தமிழ்ச் சங்கங்களில் பல்வேறு படைப்பாளர்களின் புதிய சிந்தனைகள் உலகெங்கும் வெளியாகிறது. தமிழர்கள் வெளிநாட்டிற்கு சென்றவுடன் அங்குள்ள மொழியை கற்று தாய்மொழியை மறக்காமல் அவ்வப்போது நுால்கள் எழுதி பெருமை சேர்க்கின்றனர்.
பொருளைத் தேடுவதுடன், அங்கு படைப்புகளின் வழியேயும் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் படைப்புகள் காகித கட்டுரைகளாக இல்லாமல் களஞ்சியங்களாக போற்றத்தக்கதாக உள்ளன என்றார். அல்அமீன் பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி, ஆய்வு வளமையர் ஜான்சிராணி, மாணவர்கள் பங்கேற்றனர்.

