/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்கள் தனிப்பட்ட திறன்களை வளர்க்க வேண்டும் கருத்தரங்கில் யோசனை
/
மாணவர்கள் தனிப்பட்ட திறன்களை வளர்க்க வேண்டும் கருத்தரங்கில் யோசனை
மாணவர்கள் தனிப்பட்ட திறன்களை வளர்க்க வேண்டும் கருத்தரங்கில் யோசனை
மாணவர்கள் தனிப்பட்ட திறன்களை வளர்க்க வேண்டும் கருத்தரங்கில் யோசனை
ADDED : ஏப் 29, 2024 05:38 AM
மதுரை: பரவை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரியில், 'பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்' குறித்து இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரித் தலைவர் அசோக்குமார் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சக்தி ப்ரனேஷ் தலைமை வகித்தார். முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார்.
இதில் முதன்மை விருந்தினர் சென்னை காக்னிசன்ட் டெக்னாலஜீஸ் சொல்யூஷன் மனிதவள நிர்வாகி சண்முகம் பங்கேற்றார். காலத்தின் தேவையான செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களைப் பற்றி விளக்கிய அவர், வாய்ப்புகளை உருவாக்கும் தனிப்பட்ட திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
தலைமை தொழில்நுட்ப அலுவலகம் எச்.ஆர்., ப்ளூ ஸ்கை இணை நிறுவனர் ஆனந்த முருகன், சமுதாயத்தில் பொறியாளர்களின் பங்கு, உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்பமான பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், அவற்றை உருவாக்குவதில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறைகளின் பங்கு, மென்பொருள் குறித்த அறிவு குறித்து பேசினார்.
பல்வேறு கல்லுாரிகளின் மாணவர்கள் செயல்திட்டங்களை முன்வைத்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இயந்திரவியல் துறைத் தலைவர் வினோத் நன்றி கூறினார்.

