ADDED : ஜூலை 15, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : சிலைமலைப்பட்டி, பாப்பையாபுரம், ராமநாதபுரம், பாப்புரெட்டிபட்டி பகுதி மாணவர்கள் ஏராளமானோர் பேரையூரில் படிக்கின்றனர். இவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளது. அதேசமயம் மாலையில் வீட்டிற்கு வருவதற்கு மட்டுமே பஸ் வசதி உள்ளது.
காலையில் பள்ளி செல்ல பஸ் வசதியில்லை. விருதுநகரில் இருந்து பேரையூருக்கு, சுப்புலாபுரம் வழியாக காலை 6:00 10:00 மணிக்கு அரசு பஸ் வருகிறது. காலையில் நடந்து சென்றுவிட்டு மாலையில் பஸ்சில் வரும் நிலை உள்ளது.
இதனாலேயே மாணவிகள் படிப்பை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு காலையில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

