/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயணிகள் அமர இருக்கை குடிக்க நீர் எதுவுமே இல்லை டி.கல்லுப்பட்டி பஸ்ஸ்டாண்ட் அவலம்

ADDED : மார் 03, 2025 04:54 AM
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்கார இடவசதி இன்றி கால்கடுக்க காத்திருக்கும் பரிதாப நிலை தொடர்கிறது.
இங்கு மதுரை- ராஜபாளையம், தேனி-செங்கோட்டை செல்லும் பஸ்களும், சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் உட்பட தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
இதற்காக தினமும் பலநுாறு பயணிகள் பஸ்ஸ்டாண்டுக்கு வருகின்றனர். ஆனால் பஸ்ஸ்டாண்டில் பயணிகளுக்கு குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை.
இலவச கழிப்பறை பராமரிக்கப்படாமல் உள்ளதால் கட்டணக் கழிப்பறையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தேடி அருகில் உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டுக்குள் பொதுமக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க தொட்டி இருந்தும் தண்ணீர் நிரப்புவதில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் பேருந்துகளிடம் வசூல் செய்வதில் குறிக்கோளாக இருக்கும் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.