/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., ஒரு தீயசக்தி கூட்டணி அமைச்சர் தியாகராஜன் பேச்சு
/
பா.ஜ., ஒரு தீயசக்தி கூட்டணி அமைச்சர் தியாகராஜன் பேச்சு
பா.ஜ., ஒரு தீயசக்தி கூட்டணி அமைச்சர் தியாகராஜன் பேச்சு
பா.ஜ., ஒரு தீயசக்தி கூட்டணி அமைச்சர் தியாகராஜன் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 05:01 AM
மதுரை: பா.ஜ., ஒரு தீயசக்தி கூட்டணி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி முறை நீடிக்காது என அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
மதுரையில் மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ஏ.ஏ.,ரோடு, மேலப்பொன்னகரம், கரிமேடு பகுதியில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: மத்தியில் பா.ஜ., 10 ஆண்டுகளாக கொடூர ஆட்சி செய்கிறது. சுயநலம், பணத்திற்காக தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டுவந்து முறைகேடு செய்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஒரு குறைபாடான திட்டம். இதனால் தான் சிறு குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து மாநிலங்களின் நிதியையும் மத்திய அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. தமிழகம் கடன் வாங்குவதற்கும் தடையாக உள்ளது. மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் மாநிலங்களுக்கு எல்லாம் கிடைக்கும். இல்லையென்றால் மத்திய முகமைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.,வுக்கு இழுக்கின்றனர். அங்கு ஊழல்வாதிகளே அதிகம் செல்கின்றனர். எனவே நேர்மை, ஊழல் பற்றி பேச பா.ஜ.,வுக்கு தகுதியில்லை. தமிழகத்தில் மூன்றாவதாக உருவான தீயசக்தி கூட்டணி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி முறை நீடிக்காது. அ.தி.மு.க., தாலிக்கு தங்கம் திட்டத்தில் பொய் பிரசாரம் செய்கிறது என்றார்.

