sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

/

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகள் உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூன் 29, 2024 04:36 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு முடிந்ததும் இறுதி விடைகளை வெளியிட வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முத்துலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:

வி.ஏ.ஓ.,இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4- பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,ஜன.,30ல் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பித்தோம். ஜூன் 9 ல் எழுத்துத் தேர்வு நடந்தது.ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் முடிந்தபின்தான் இறுதி (கீ)விடைகள், ஓ.எம்.ஆர்.,விடைத்தாள்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி.,அறிவித்தது. இதற்கு 3 ஆண்டுகள் ஆகும். இதன் மூலம் தேர்வின் நோக்கம் நிறைவேறாது. தகுதியற்றவர்கள் தவறான முறையில் பணியில் நுழைய வாய்ப்புள்ளது. அறிவிப்பு சட்டவிரோதமானது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி., நடத்திய சில தேர்வுகளில் தவறுகள் நடந்துள்ளன. குரூப் 4 தேர்வு நியமன நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

தேர்வின் இறுதி முடிவு வெளியாவதற்கு முன் இறுதி விடைகளை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி ஆர்.என். மஞ்சுளா: பிற பணிகளுக்கு தேர்வு நடத்தும் முகமைகள் பின்பற்றுவதைப்போல், தேர்வு முடிந்தபின் இறுதி விடைகளை டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us