ADDED : மார் 24, 2024 06:04 AM
கோயில்
கும்பாபிேஷகம்: அனுமார் கோயில், தத்தனேரி, மதுரை, காலை 9:30 மணி.
கும்பாபிேஷகம்: சீதாராமாஞ்சநேயர் தேவஸ்தானம், 46, மகால் 5வது தெரு, மதுரை, தலைமை: சீதாராமாஞ்சநேய சபைத் தலைவர் கருணாகரன், ரமிலா, காலை 9:30 மணி.
சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.
தெப்ப உற்ஸவம் - எண்ணெய் காப்பு உற்ஸவம், ஆண்டாள் வீதி உலா: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மாலை 6:00 மணி.
பங்குனி உத்திரம் - பால்குடம் எடுத்தல்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், 18ம் படி கருப்பணசாமி சன்னதியில் இருந்து புறப்படுதல், காலை 10:00 மணி.
பங்குனி உத்திரத் திருவிழா - பால்குடம், பால் காவடி எடுத்தல்: மயில்வேல்முருகன் கோயில், கோச்சடை, மதுரை, காலை 7:00 மணி.
பவுர்ணமி வழிபாடு பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 6:15 மணி.
பங்குனி திருவிழா - முளைப்பாரி, மஞ்சள் நீராட்டு, படையல் பூஜை: சித்தி விநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: சடகோப ராமானுஜ ஐயப்ப பக்த சபை, காலை 7:00 மணி முதல்.
பங்குனித் திருவிழா- அம்மன் கூந்தல் விரிப்பு: திரவுபதையம்மன் கோயில், திருவாதவூர், இரவு 11:00 மணி.
பங்குனித் திருவிழா- பால்குடம் எடுத்தல்: வடக்கு புறகாளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, காலை 6:00 மணி.
கிறிஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், காலை 10:00 மணி.
திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு: திருக்குடும்ப பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், மேலப்பொன்னகரம் 7 வது தெரு, மதுரை, பங்கேற்பு: பாதிரியார்கள் ஜோசப், சின்னத்துரை, காலை 7:15 மணி.
நாம சங்கீர்த்தனம், ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23 டி. சுப்பிரமணியபிள்ளை தெரு, மதுரை. மாலை 4:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ராமகிருஷ்ணர் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் -- சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
சித்தர் இலக்கியம்: நிகழ்த்துபவர்-- திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்பேரைஅரவிந்த்லோசனன், மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சண்முகலால், சகஸ்ரநாம குழு, மாலை 6:30 மணி.
பொது
தினமலர் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூசன் இணைந்து நடத்தும் பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி, கருத்தரங்கம்: தமுக்கம் மைதானம், காலை 10:00 மணி முதல் மாலை 6:30 வரை.
ஸ்ரீகுரோதி வருட பஞ்சாங்கம் வெளியீடு: கிளை அலுவலகம், வள்ளலார் தெரு, ராமையா வீதி, ஜெய்ஹிந்துபுரம், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:00 மணி.
பாடகர் டி.எம். சவுந்தரராஜன் பிறந்தநாளை முன்னிட்டு பாராட்டு விழா: ஸ்ரீமத் நாயகி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, தெப்பக்குளம், மதுரை, பாராட்டு பெறுபவர்: அகில இந்திய டி.எம்.எஸ்., ரசிகர்நற்பணி மன்றம் பாலன், ஏற்பாடு: சவுராஷ்டிர மூத்த குடிமக்கள் மன்றம், மாலை 4:25 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி பட்டறை: ஆரோ லேப், வீரபாஞ்சான், சிறப்புரை: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்தி மியூசியம் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், ஆரோலேப், காலை 9:30 மணி.
பள்ளி, கல்லுாரி
பள்ளி ஆண்டு விழா: அரோபனா இந்தியன் பள்ளி வளாகம், நேரு நகர், பைபாஸ் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்றம்மதுரை கிளை வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், மதியம் 2:00 மணி.

