ADDED : ஆக 10, 2024 05:19 AM
கோயில்
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் அம்மன் உலா, காலை 9:00 மணி, கிளி வாகனத்தில் அம்மன் உலா, இரவு 7:00 மணி.
24ம் ஆண்டு ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு, மதுரை, பொங்கல்வைத்தல், காலை 6:00 மணி, தேர்பவனியுடன் பூஞ்சோலைக்கு அனுப்புதல், மாலை 5:00 மணி.
களரி கும்பிடும் விழா: முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, அன்னதானம், காலை 8:00 மணி முதல்.
கனக விழா: நவநீதக்கண்ணன் பஜனைக் கூடம், கீழமாரட் வீதி, மதுரை, நவநீதகண்ணன் அஷ்டோத்திரம், காலை 7:00 மணி, அவிநாசி ஓதுவார் குழுவின் திருமுறை பாராயணம், காலை 8:00 மணி, ராமநாதபுரம் முத்தாலம்மன் மகளிர் மன்றம் சார்பில் பஜனை, கோலாட்டம், கும்மி, மதியம் 12:00 மணி, பரமக்குடி ராமகிருஷ்ண பஜனை மண்டலியபஜன், ஜனனி மகளிர் மன்ற குழுவின் அபிநய பஜன் பாடல், மாலை 6:30 மணி, சனி வார பஜனை, இரவு 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர்-ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
'மா மதுரை' விழா: மாரத்தான், சைக்களத்தான்: ரேஸ்கோர்ஸ், மதுரை, காலை 5:00 முதல் 8:00 மணி வரை, பாரம்பரிய நடைபயணம்: வடக்கு கோபுரம், மீனாட்சி அம்மன் கோயில், காலை 7:00 மணி, வைகை ஆற்றில் விளக்கேற்றுதல், மாலை 6:00 மணி, பலுான் திருவிழா: வைகை கரை ரோடு, எம்.ஜி.ஆர்., பாலம், குழந்தைகளுக்கான ஸ்பிளாஸ் அண்ட் ஷாப் விழா, காந்தி மியூசியம், ஏற்பாடு: கான்பிடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ், யங் இந்தியன்ஸ், மதியம் 12:00 முதல் இரவு 7:00 மணி வரை, வான வேடிக்கை: எம்.ஜி.ஆர்., பாலம், இரவு 7:00 மணி.
மதுரை தமிழ் இசைச் சங்கத்தின்50ம் ஆண்டு தமிழ் இசைப் பொன்விழா, ராஜா முத்தையாவின் 120வது பிறந்தநாள் விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, பாட்டு - ரஞ்சனி ராதா, வயலின் - பார்கவ விக்னேஷ், மிருதங்கம் - அஜித் ஸ்ரீதர், கடம் - கணபதி, மாலை 5:15 மணி, சென்னை கோமல் தியேட்டர் வழங்கும் திரவுபதி - இயல் இசை நாடக வடிவம், இயக்கம் தாரணி கோமல், இசை: ராஜ்குமார் பாரதி, பாடல்: சதீஷ்குமார், மாலை 6:45 மணி.
மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சங்க ஆண்டு விழா: தில்லை சிவம் திருமணமகால், திருப்பாலை, சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியன், ஏற்பாடு: கிராமிய மனநல மறுவாழ்வுத் திட்டம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி மையம், காலை 11:00 மணி.
மாவட்ட பொதுக்குழு கூட்டம்: சாஸ்தா முதியோர் இல்லம், கள்ளந்திரி, தலைமை: மாவட்ட துணைத் தலைவர் குருசாமி, செயலாளர் பாண்டியராஜன், பங்கேற்பு: வழக்கறிஞர்கள் பெருமாள், பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினர்கள், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 9:00 மணி.
முப்பெரும் விழா - 20ம் ஆண்டு விழா, 700வது திருவாசக முற்றோதுதல் விழா, ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா: நகரத்தார் திருமண மண்டபம், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் விஜயலட்சுமி மீனாட்சிசுந்தரம், சிறப்பு விருந்தினர்கள்: புதுகை பாரதி, 'டத்தோ' நீதிபதிசொக்கலிங்கம், ஏற்பாடு: நகரத்தார் மகளிர் சங்கம், காலை 8:45 மணி.
பாரம்பரிய விழா 2024 - கிராமங்களில் கல்லுாரி மாணவர்களுக்கான கலைவிழா போட்டிகள்: தானம் அறக்கட்டளை அலுவலகம், மதுரை, நாட்டுப்புற பாடல், வீதி நாடகம் போட்டிகள்,ஏற்பாடு: தானம் அகாடமி, காலை 7:30 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: தெற்கு பெருமாள்மேஸ்திரி வீதி, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சி வழங்குபவர்: தேசிய சதுரங்க நடுவர் பாண்டியராஜன், காலை 11:00 மணி, யு.பி.எஸ்.சி., தேர்வை வெற்றி கொள்வது எப்படி: ஆலோசனை வழங்குபவர்: யு.பி.எஸ்.சி., தேர்வில் இந்திய அளவில் 354 ரேங்க் பெற்ற லிந்தியா, காலை 11:00 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
நல்லாசிரியர் விருதுக்கான சாதனை பரிசு வழங்குதல், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு, கல்வி உதவித்தொகை வழங்குதல்: டி.வி.எஸ்., பள்ளி, டி.வி.எஸ்., நகர், மதுரை, தலைமை: மேனேஜிங் டிரஸ்டி கண்ணன், சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., சக்ரா லிட்., இயக்குநர் சீனிவாசவரதன், பங்கேற்பு: வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர்அருணாகுமாரி, தாம்பிராஸ் முரளி, டிரஸ்டி நாராயணன், இல.அமுதன், ஏற்பாடு: சுப்பிரமணிய பாரதி டிரஸ்ட், மாலை 6:00 மணி.
கலைக்கூடல் - 78ம் ஆண்டு சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், மாலை 6:30 மணி.
முத்தமிழ் விழா 2024: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் இக்னேசியஸ் மேரி, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காலை 9:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 11:00 மணி.
கண்காட்சி
சிட்கான் 7வது சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கண்காட்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பி.என்.ஐ., சாணக்கியாஸ், தக் ஷா பர்னிச்சர் வழங்கும் ஆதிரை அழைக்கிறாள் மெகா கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி.
ஹஸ்டகாலா - கைவினைப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி.,ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை.