/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யானைக்கல் மேம்பாலத்தில் இன்றிரவு செல்ல தடை
/
யானைக்கல் மேம்பாலத்தில் இன்றிரவு செல்ல தடை
ADDED : மார் 12, 2025 01:17 AM
மதுரை; மதுரை வைகை வடகரையில் யானைக்கல் மேம்பாலத்தின் இறக்கம், மேளக்காரத்தெரு பகுதியில் பாலத்தின் மேல்தளத்தில் கட்டுமானம், சாலைப்பணிகள் நடக்க உள்ளது. இதையொட்டி இன்று (மார்ச் 12) இரவு 10:00 மணி முதல் நாளை (மார்ச் 13) காலை 6:00 மணி வரை போக்குவரத்துமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யானைக்கல் பாலம் வழியாக எம்.எம்.லாட்ஜ் சந்திப்புக்கு செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து கோரிப்பாளையம், நத்தம், அழகர்கோவில் செல்லும் டவுன்பஸ்கள், கனரக வாகனங்கள் சிம்மக்கல், தைக்கால் தெரு, எம்.ஜி.ஆர்., பாலம், வைகை வடகரை சாலை சந்திப்பு, செல்லுார் கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேஷன் ரோடு, புதுப்பாலம், எம்.எம்.லாட்ஜ், இ2, இ2 சாலை, நவநீதகிருஷ்ணன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, ரவுண்டானா வழியாக செல்லலாம்.
பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து தெப்பக்குளம் செல்லும் இரு சக்கர வாகனங்கள் சிம்மக்கல், யானைக்கல், வைகை தென்கரை சாலை, வைகை தென்கரை குருவிக்காரன் சாலை சந்திப்பு வழியாக செல்லலாம்.
மேலும் அண்ணாநகர், மாட்டுத்தாவணி செல்லும் டூவீலர்கள் சிம்மக்கல், யானைக்கல், வைகை தென்கரை சாலை, ஓபுளாபடித்துறை சந்திப்பு,குருவிக்காரன் சாலை சந்திப்பு வழியாக செல்லலாம்.
எம்.ஜி.ஆர்., பாலம் தென்கரை சந்திப்பில் இருந்து தைக்கால் தெரு வழியாக சிம்மக்கல் செல்ல எந்தவித வாகனத்திற்கும் அனுமதியில்லை.
ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் வெளியூர் பஸ்கள் ஜெ., பாலம், தத்தனேரி பாலம், செல்லுார் கபடி ரவுண்டானா, வைகை வடகரை சாலை, ஆசாரி தோப்பு சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ஆர்ச் வழியாக செல்ல வேண்டும்.