கொட்டாம்பட்டி: சேக்கிபட்டியில் கொட்டாம்பட்டி வேளாண் தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் காரீப் பருவ விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குநர் கமலாலட்சுமி தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் சுபாசாந்தி முன்னிலை வகித்தார். துணை, உதவி இயக்குநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் நோக்கம், செயல்பாடு, மண் வளத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள், மண்ணுயினர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசன திட்டங்கள், பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ தொகை, வேளாண் காப்பீட்டு திட்டம் குறித்து பேசினர்.
துணை வேளாண் அலுவலர் தனசேகரன், உதவி அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜதுரை, கண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.