நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : கொட்டாம்பட்டி வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பொட்டப்பட்டியில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துபயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவி ஜெயசுதா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் விக்னேஷ் குமார், உதவி வேளாண் பொறியாளர் கண்ணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை பங்கேற்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்தும் மானியம் பெறும் வழிமுறைகள் குறித்தும் பேசினர். ஏற்பாடுகளை விவசாயி செல்வம் செய்திருந்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்திய கீர்த்தனா நன்றி கூறினார்.