ADDED : ஜூன் 06, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை காந்தி மியூசியவளாகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம்சார்பில் 'காந்தியை அறிந்து கொள்வோம்' எனும் தலைப்பில் பத்து நாள் படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா நடந்தது.
முதல்வர் தேவதாஸ் தொடங்கி வைத்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் பங்கு, ஜார்ஜ் ஜோசப்பின் சமுதாயப் பணிகள் குறித்து மியூசிய செயலாளர் நந்தாராவ், செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஜெயராஜ் பேசினர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலந்துரையாடலில் தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.