/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் மூன்றாண்டுகளில் நடந்த 5000 கொலைகள்; உதயகுமார் குற்றச்சாட்டு

ADDED : செப் 17, 2024 04:11 AM
பேரையூர் : தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 5000 கொலைகள் நடந்துள்ளதாக உதயகுமார் பேசினார்.
அ.தி.மு.க., சார்பாக டி.கல்லுப்பட்டியில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
எதிர்க்கட்சி தொகுதிகளை முற்றிலும் புறக்கணித்து ஓரவஞ்சனை செய்கிறது தி.மு.க., அரசு. தமிழகத்தில் கொலைகள் அதிகரித்துள்ளது. 2021 ----2022 ஆண்டுகளில் 1558 கொலைகள், 2022 - -2023 ஆண்டுகளில் 1596 கொலைகள், 2023- - 2024ல் 1600 கொலைகள் என மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளது.
தமிழக பட்ஜெட்டில் முதியோர் உதவி தொகைக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் 60 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம், 45 ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாற்றம் என இதைத்தான் இந்த அரசு செய்கிறது என்றார்.