/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாலிக்கு தங்கம் திட்டம் அமைச்சர் பொய் சொல்கிறார் உதயகுமார் பதிலடி
/
தாலிக்கு தங்கம் திட்டம் அமைச்சர் பொய் சொல்கிறார் உதயகுமார் பதிலடி
தாலிக்கு தங்கம் திட்டம் அமைச்சர் பொய் சொல்கிறார் உதயகுமார் பதிலடி
தாலிக்கு தங்கம் திட்டம் அமைச்சர் பொய் சொல்கிறார் உதயகுமார் பதிலடி
ADDED : ஏப் 12, 2024 05:03 AM
மதுரை: 'அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக அமைச்சர் தியாகராஜன் பொய் சொல்கிறார்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து திருமங்கலம் பகுதியில் உதயகுமார் பேசியதாவது: தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 12.50 லட்சம் பெண்கள் பயன் பெற்றார்கள். மதுரை பிரசார கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் தாலிக்கு தங்கம் திட்டத்தை அ.தி.மு.க., ஆட்சி ரத்து செய்துவிட்டது என்று பச்சை பொய் கூறுகிறார். கொரோனா காலத்தில் கூட ஒரு லட்சம் தங்கக் காசுகளை கொடுத்து இருக்கிறோம். தி.மு.க., தான் தாலிக்கு தங்கம் திட்டம், லேப்டாப் திட்டத்தை ரத்து செய்தது என்றார்.