/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழங்குடியினருக்கு தனிஅமைச்சகம் ஏற்படுத்த வலியுறுத்தல்
/
பழங்குடியினருக்கு தனிஅமைச்சகம் ஏற்படுத்த வலியுறுத்தல்
பழங்குடியினருக்கு தனிஅமைச்சகம் ஏற்படுத்த வலியுறுத்தல்
பழங்குடியினருக்கு தனிஅமைச்சகம் ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : மே 05, 2024 03:28 AM
மதுரை, : 'பழங்குடியினருக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்' என லாஸ் சட்டப் பணி மையம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்ட 36 கிராமங்களில் வாழும் பளியர் பழங்குடி மக்களின் வாழ்வாதார நிலை ஆய்வறிக்கையை வெளியிட்டு சமூக ஆய்வாளர் அலாய்சியஸ் இருதயம் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: 'ஜெய் பீம்' படம் பார்த்த பின் முதல்வர் ஸ்டாலின் பழங்குடியினருக்கு அரசின் நல உதவிகள் சென்றடைய வேண்டும் என 2021 ல் உத்தரவிட்டார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இக்கிராமங்களை சேர்ந்தவர்களில் ஒருவர்கூட அரசுப் பணியை அடைந்ததில்லை.
இதற்கு ஏழ்மை, கல்வியறிவின்மையே காரணம். பள்ளிக்கு செல்லாத 55 சதவீத ஆண்கள், 45 சதவீத பெண்கள் உள்ளனர்.
பள்ளிகள், அங்கன்வாடி மையம், சுகாதார நிலையம் தொலைதுாரத்தில் உள்ளன.
பலருக்கு பிறப்புச் சான்று, வாக்காளர் அட்டை, அரசு மருத்துவ காப்பீடு, ஆதார், வன உரிமை அட்டை இல்லை. இவர்களின் வாழ்வாதார தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
பழங்குடியினருக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். தனி திட்டம் உருவாக்கி பொருளாதார வளர்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
செயல்பாடுகள் குறித்து 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றார்.
மைய இயக்குனர் சந்தனம், நாட்டைக் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் பங்கேற்றனர்.