ADDED : ஜூலை 26, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி கிராம மக்கள் நேற்று காலை 11:20 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பாப்பாபட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதித்தது. அவ்வழியே வந்த எம்.எல்.ஏ., அய்யப்பனையும் முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ., போலீசார், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.