/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கலெக்டர் அலுவலக ஆலோசனை மையத்துக்கு நம்பிக்'கை'யுடன் வாங்க: மாற்றுத்திறனாளிகளுக்கும் இருக்கு வேலைவாய்ப்பு

ADDED : மார் 14, 2025 05:42 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் செயல்படுகிறது. அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 'ஆரோக்கியா' மற்றும் ரீயாக்ட் அமைப்புகள் சார்பில் இயங்கும் இம்மையம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகள், வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கணினி இயக்குவது உட்பட திறன்மேம்பாடுகளில் பயிற்சி அளிக்கின்றன. சுயதொழில் செய்வதற்கான தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
இவ்வகையில் கலெக்டர் சங்கீதாவின் ஏற்பாட்டில் 6 மாதங்களாக அவ்வப்போது தனியார் நிறுவனங்களை வரவழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் 55 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு திறன் பயிற்சி, தொழில் பயிற்சிகளை அளித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், ''18 முதல் 35 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த ஆலோசனை மையத்தை வேலைநாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப முன்னணி தனியார் நிறுவனங்களில் மதுரை பகுதியிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 4வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளோம். மேலும் விபரங்களுக்கு 99448 15214 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.