ADDED : ஆக 17, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கள்ளந்திரி இருபோக சாகுபடிக்கு ஆக. 17 முதல் ஆக. 24 வரை வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது தொடர் மழையால் கண்மாய்கள், கால்வாய்களில் உடைப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆக.11ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் ஆக. 17 முதல் 24 வரை தினமும் 900 கனஅடி தண்ணீர் இருபோகத்திற்கு திறக்கப்படும். அதன் பின் முறைப்பாசன முறையில் 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படும் என்றார்.