/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வணிகவரித்துறையில் எப்போது டிரான்ஸ்பர்
/
வணிகவரித்துறையில் எப்போது டிரான்ஸ்பர்
ADDED : மார் 03, 2025 04:48 AM
மதுரை : வணிகவரித்துறையில் ஐந்து ஆண்டுகளாக பணியிட மாற்றம் இன்றி பணியாற்றுவதால் அலுவலர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
தமிழக வணிகவரித்துறை அரசுக்கு முக்கிய வருவாய் தரும் துறையாக உள்ளது. இதனால் அரசின் செல்லக்குழந்தை போல உள்ள இத்துறையிலும் ஊழியர்கள், அலுவலர்களுக்கு பெரும் மனக்குறைகள் உள்ளன.
இந்த துறையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் மாநில வரிஅலுவலர்கள் வரையான பல நிலைகளில் ஊழியர்கள் இடமாறுதல் இன்றி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் வெளிமாவட்டங்களில் பணியாற்றுவதால் இடமாறுதலை எதிர்பார்க்கின்றனர்.
அதற்கான நடவடிக்கைகளை துவக்காததால் ஏமாற்றத்துடன் உள்ளனர். வழக்கமாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்வதுண்டு. பணியில் முறைகேடு நடந்து விடுமோ என்ற எதிர்பார்ப்புடன், அவ்வாறு நிகழாமல் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. ஆனால் வணிகவரித் துறையில் பல ஆண்டுகளாக இடமாறுதல் வழங்காததால் ஊழியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் உயர்பதவியில் உள்ள உதவி கமிஷனர், துணை கமிஷனர், இணை கமிஷனர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அவர்களை சொந்த மாவட்டங்களில் நியமிப்பது கூடாது. வணிகர்களின் வழக்குகளுக்கு உதவிவிடுவர் என்பதால் இது நடைமுறையில் இல்லை. ஆனால் இங்கு பலர் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டு வந்துவிட்டனர் என ஊழியர்கள் குமுறுகின்றனர். எனவே நான்கைந்து ஆண்டுகளாக காத்திருக்கும் மற்ற ஊழியர்களுக்கும் இடமாறுதல் வழங்க வேண்டும் என ஊழியர்கள் குமுறுகின்றனர்.