/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வர்த்தகமா, வாகன பார்க்கிங்கா எல்லாமே நடுரோட்டில்தான் திருமங்கலத்தில் அவதியோ அவதி
/
வர்த்தகமா, வாகன பார்க்கிங்கா எல்லாமே நடுரோட்டில்தான் திருமங்கலத்தில் அவதியோ அவதி
வர்த்தகமா, வாகன பார்க்கிங்கா எல்லாமே நடுரோட்டில்தான் திருமங்கலத்தில் அவதியோ அவதி
வர்த்தகமா, வாகன பார்க்கிங்கா எல்லாமே நடுரோட்டில்தான் திருமங்கலத்தில் அவதியோ அவதி
ADDED : மே 04, 2024 05:42 AM

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் வேன்களில் வியாபாரம் செய்வோர் முதல் மற்றும் வாகன பார்க்கிங் வரை எல்லாமே நடுரோட்டில் நடப்பதால் நெரிசல், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் வங்கிக் கிளைகள், 5 பள்ளிக்கூடங்கள், நகராட்சி, தாலுகா அலுவலகங்கள், 4 கோர்ட்டுகள், சிறைச்சாலை, கருவூலம், நகர், டவுன் மற்றும் போக்குவரத்து ஸ்டேஷன்கள், டி.எஸ்.பி.,, பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளூர் ஸ்டாண்ட், வெளியூர் பஸ் ஸ்டாண்ட் என நெரிசலுக்கு காரணமான அனைத்தும் உள்ளன.
இந்தப்பகுதியில் அலுவலக வேலையாக வருவோர் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திச் செல்கின்றனர். மினி வேன்களில் பழங்கள், காய்கறிகள், பிரியாணி விற்போர் 'பார்க்கிங்' இடங்களை ஆக்கிரமித்து உள்ளனர். சிறியரக ஸ்பீக்கர்களை கட்டி காலை முதல் இரவு வரை அலற விடுகின்றனர்.
சிறிய இடங்களையும் ஆக்கிரமிப்பதால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்தும் நடுரோடு வரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. திருமங்கலம் வழியாக செல்லும் பஸ்கள், டோல்கேட் கட்டணத்திலிருந்து தப்ப, கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் ஏற்படும் நெரிசலால் விபத்து அபாயம் உள்ளது.
உசிலம்பட்டி ரோட்டில் சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு பெயரளவில் எடுக்கப்பட்டது. மறுநாளே கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்தனர். இதனால் ரோடு கிராமச் சாலைகளை விட குறுகலாக உள்ளது.
திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டில் அரசு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம், நகராட்சி அலுவலகம் பகுதி மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன. இந்த ரோட்டில் நிரந்தரமாக 4 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. ரயில்வே பீடர் ரோட்டில் இருந்த பூ மார்க்கெட் தற்போது தண்ணீர் தொட்டி வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு வரும் வாகனங்களும் மருத்துவமனைக்கு எதிரே ரோட்டில் நிறுத்தப்படுவதால், அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் எளிதாக செல்ல முடியவில்லை.
எல்லா துறை அதிகாரிகளும் திருமங்கலத்தில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை யாரும் தீர்வு காணவில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் விரும்புகின்றனர்.