/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை கூட்டுக் குடிநீர், பஸ் வசதி கிடைக்குமா: வி.பி.சிந்தன் நகர் குடியிருப்போர் எதிர்பார்ப்பு
/
வைகை கூட்டுக் குடிநீர், பஸ் வசதி கிடைக்குமா: வி.பி.சிந்தன் நகர் குடியிருப்போர் எதிர்பார்ப்பு
வைகை கூட்டுக் குடிநீர், பஸ் வசதி கிடைக்குமா: வி.பி.சிந்தன் நகர் குடியிருப்போர் எதிர்பார்ப்பு
வைகை கூட்டுக் குடிநீர், பஸ் வசதி கிடைக்குமா: வி.பி.சிந்தன் நகர் குடியிருப்போர் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 09, 2024 12:45 AM

வேடர்புளியங்குளம் : திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வேடர்புளியங்குளம் முதல் வார்டு வி.பி.சிந்தன் நகரில் காந்திஜி தெரு, சேலம் சிறை தியாகிகள் தெரு, அன்னை தெரசா தெரு, பெரியார் தெரு, தியாகி பாலு தெரு, அப்துல் கலாம் தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஒருபுறம் தனக்கன்குளம் கண்மாய், பின்புறம் அண்ணா பல்கலை உள்ளன.
இப்பகுதி மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் வி.பி.சிந்தன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் நீதிராஜன், துணைத் தலைவர் பாண்டி, செயலாளர் பாலசுப்ரமணியன், துணைச் செயலாளர் அருண்குமார், பொருளாளர் மாலினி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மருதமுத்து, காளிதாஸ், கோயில் தலைவர் முருகன், கோயில் பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:
எங்கள் குடியிருப்புப் பகுதி, நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சிந்தன் நகர் மெயின் ரோட்டின் வழியாக, வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்ய குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து மேல்நிலை தொட்டிக்கும் இணைப்பு வழங்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளோம்.
இப்பகுதியில் தொடர்ந்து குப்பை அள்ளுவது கிடையாது. அதை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு மூச்சுத் திணறல் உண்டாகிறது. பல தெருக்களில் தெரு விளக்கு இல்லை. இரவு குற்றங்களை தடுக்க போலீசார் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும்.
பஸ் வசதி வேண்டும்
6 ஆண்டு காலத்தில் 10 முறைக்கு மேல் மனு கொடுத்து விட்டோம். எந்தவித நடவடிக்கையும் இல்லை. 1 கி.மீ., துாரம் மக்கள் நடந்து வந்து மெயின் ரோட்டில் பஸ் ஏறவேண்டியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் சேர்ந்து வி.பி.சிந்தன் நகரை கட்டமைத்தோம். ஆனால் எங்களுக்கே பஸ் வசதி இல்லை.
இவ்வாறு கூறினர்.
அருகிலிருக்கும் தனக்கன்குளம் கண்மாய் நீர்பிடிப்புப் பகுதியாகும். ஆனால் வாகனங்களைக் கழுவுவது, குப்பை கொட்டுவது, நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவது போன்றவற்றால் கண்மாய் சீரழிந்து கிடக்கிறது. ஊராட்சி அதிகாரிகள் கண்மாயை துார்வாரி பராமரித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. தனக்கன்குளம் வேடர்புளியங்குளம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் இதுவரை 3 தம்பதிகள் பலியாகியுள்ளனர். நெடுஞ்சாலைத் துறையிடம் முறையிட்டதில் உயர்மட்ட பாலம் கட்டுவதாக கூறினர். மண் பரிசோதனை செய்தனர். ஆனால் போதிய நிதி ஒதுக்காமல் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளனர். நான்கு வழிச்சாலை கிராசிங்கில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பர்மா காலனி செல்ல வேண்டி உள்ளது. அங்கு போதிய மருத்துவர்கள் இல்லை. வேடர்புளியங்குளம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் நிறைய உள்ளன. அங்கு ஊராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிக் கொடுத்தால் வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி, மாவிலிப்பட்டி கிராம மக்கள் பயன்பெறுவார்கள். மேற்கண்ட புகார்களை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டுகிறோம் என்றனர்.

