ADDED : டிச 03, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மியூசியத்தில் மதுரைக் கல்லுாரி முதுகலை தமிழ்த்துறை மாணவர்களுக்கு 10 நாட்களுக்கான கல்வியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சியின் தோற்றம், வளர்ச்சி, இந்தியாவில் நடந்த அகழாய்வுகள், அதிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுடன் மதுரைக்கல்லுாரி மாணவர்களுடன் கலந்துரையாடினர். கீழடி அகழ்வாராய்ச்சி தளம், மியூசியத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தடயவியல் துறை இளநிலை அறிவியல் அறிஞர் காளீஸ்வரன் சான்றிதழ் வழங்கினார். மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன் ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவர் ரத்தினசாமி, பேராசிரியர்கள் ரத்தினக்குமார், காந்திமதி ஒருங்கிணைத்தனர்.