ADDED : டிச 13, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலை குலசேகரன் கோட்டை பிரிவு அருகே நாமக்கலில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றிச் சென்ற லாரி பஞ்சராகி நின்றது.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு விரைவு பஸ் லாரியின் பின்புறம் மோதியது.
இதில் பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாதேஷ் 38, உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற லாரி டிரைவர் விபத்தை பார்க்க நிறுத்தினார்.
இந்த லாரியின் பின்னால் வந்த 2 தனியார் ஆம்னி பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதில் ஆம்னி பஸ் டிரைவர் தென்காசி பழனிக்குமார் 30, உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

