UPDATED : அக் 12, 2026 05:41 PM
ADDED : அக் 12, 2026 05:37 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மதுரை கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது: ஒத்தக்கடை எஸ்.எஸ்.
மகாலில் அக். 15ல் பிரதம மந்திரி சூரிய வீடு திட்டம் மற்றும் தமிழக அரசின் வீட்டு கூரை சூரிய சக்தி மின் நிலைய மானிய திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
