/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீர் திறக்காததால் தரிசாகும் 1500 ஏக்கர் நிலங்கள்
/
தண்ணீர் திறக்காததால் தரிசாகும் 1500 ஏக்கர் நிலங்கள்
தண்ணீர் திறக்காததால் தரிசாகும் 1500 ஏக்கர் நிலங்கள்
தண்ணீர் திறக்காததால் தரிசாகும் 1500 ஏக்கர் நிலங்கள்
ADDED : செப் 21, 2024 05:55 AM

மேலுார்: ஒரு போக பாசனத்திற்குதண்ணீர் திறந்தும் 9வது கால்வாயில் நீர்வளத்துறையினர் தண்ணீர் திறக்காததால் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாற்றுகின்றனர்.
புலிப்பட்டி பெரியாறு 12வது பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்ததும் இ.மலம்பட்டி எறிச்சி, குறிச்சிபட்டி கண்மாய் மற்றும் சின்ன, பெரியஇலந்தை குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விதி.
இக்கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைந்த பிறகு தான் ஒரு போக பாசன பகுதியில் உள்ள பிற கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆரம்ப கால முதல் கடைபிடிக்கப்பட்ட இம்முறையை தற்போது நீர்வளத்துறையினர் கடைபிடிக்கவில்லை.
விவசாயி தர்மலிங்கம்: தனியாமங்கலம் 12வது பிரதான கால்வாயில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள இ.மலம்பட்டியில் சின்ன மற்றும் பெரிய இலந்தை குளத்திற்கு தண்ணீர் திறந்து 6 நாட்களாகியும் இக்கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. அதனால் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டும், அதனால் 1500 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகவும் கிடக்கின்றன.
நீர்வளத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல்தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. மேலும் கால்வாய் செடிகளை அகற்றவும் இல்லை. கால்வாய்களை பராமரிக்கவும் இல்லை என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.