/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
7 மாதங்களில் 168 'போக்சோ' குற்றவாளிகளுக்கு தண்டனை தென்மாவட்டங்களில் 93 பேருக்கு 'குண்டாஸ்'
/
7 மாதங்களில் 168 'போக்சோ' குற்றவாளிகளுக்கு தண்டனை தென்மாவட்டங்களில் 93 பேருக்கு 'குண்டாஸ்'
7 மாதங்களில் 168 'போக்சோ' குற்றவாளிகளுக்கு தண்டனை தென்மாவட்டங்களில் 93 பேருக்கு 'குண்டாஸ்'
7 மாதங்களில் 168 'போக்சோ' குற்றவாளிகளுக்கு தண்டனை தென்மாவட்டங்களில் 93 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 13, 2025 06:34 AM
மதுரை: 'தென்மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களில் 153 'போக்சோ' வழக்குகளில் 168 பேர் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்' என தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை தென்மாவட்டங்களில் 122 'போக்சோ' வழக்குகள் குழந்தைகளுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்டன. இதில் 136 பேர் தண்டிக்கப்பட்டனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 238 'போக்சோ' வழக்குகளில் 252 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகளில் 61 சதவீதம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்தாண்டு தண்டனை விகிதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக 44 வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை, 20 ஆயுள் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் 36 வழக்குகள், தேனி 20, சிவகங்கை 17, கன்னியாகுமரி 20, துாத்துக்குடி 18 வழக்குகள் இதில் அடங்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் 2 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டு, 50 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 2 வழக்குகளில் 62 ஆண்டுகள், 41 ஆண்டுகள் சிறை தண்டனையும், தேனி மாவட்டத்தில் ஒரு வழக்கில் இரட்டை ஆயுளும் கிடைத்தன.
799 பாலியல் குற்றவாளிகள் தேனி மாவட்டத்தில் 2 வழக்குகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டனை கிடைக்கப்பெற்றன. எஸ்.சி., எஸ்.டி., சட்டத்துடன் பதிவு செய்யப்பட்ட 9 'போக்சோ' வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு வழக்கில் ஆயுள், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத்தரப்பட்டது. 93 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் 799 பாலியல் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவாக தண்டனை கிடைக்க காரணம், 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்தில் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, குடியிருப்பு பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு, குழந்தைகள் நலக்குழுவுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்குள் தண்டனை கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளால் இவை சாத்தியமாயின. இவ்வாறு கூறினார்.