/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தலைமையாசிரியராக 19 பேர் பதவி உயர்வு
/
தலைமையாசிரியராக 19 பேர் பதவி உயர்வு
ADDED : ஜூலை 05, 2025 12:50 AM
மதுரை; மதுரையில் கல்வித்துறை சார்பில் நடந்த பொதுமாறுதல் கலந்தாய்வில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
மூன்றுமாவடி எல்.பி.என்., பள்ளியில் நடந்த இக்கலந்தாய்வில் 21 முதுகலை பட்டதாரி (பி.ஜி.,) ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களில் 19 பேர் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றனர். பி.ஜி., ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் வெளிப்படையாக காண்பிக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
'சி.இ.ஓ., ரேணுகா தலைமையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் கலந்தாய்வு நடத்தப்பட்டதாக' தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பாராட்டு தெரிவித்து, தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை, சங்க மாநில பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கவுரவித்தனர்.