/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் 2 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலம்
/
குன்றத்தில் 2 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : ஆக 27, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் ஆக. 30, 31ல் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் ஹிந்து முன்னணி, பா.ஜ., சார்பில் 30 பெரிய விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.
இந்த சிலைகள் ஆக. 30ல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட உள்ளது.
அகில பாரத அனுமன் சேனா ஹிந்து மக்கள் கட்சி சார்பில் இன்று 25 மெகா விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
இந்த சிலைகள் ஆக. 31 ல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட உள்ளது.