/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் - பைக் மோதி விபத்து 2 மாணவர்கள் உயிரிழப்பு
/
பஸ் - பைக் மோதி விபத்து 2 மாணவர்கள் உயிரிழப்பு
ADDED : பிப் 01, 2026 06:51 AM

உசிலம்பட்டி: உசி லம்பட்டியில், பைக் மீது பஸ் மோதிய விபத்தில், இரு மாணவர்கள் பலியாகினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, விளாம்பட்டியை சேர்ந்தவர் தங்கம் மகன் மாதேஷ், 18; உசிலம்பட்டி தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். செல்லம்பட்டி அருகே, அம்பட்டையன்பட்டியை சேர்ந்தவர் சஞ்சீவி மகன் ராஜகோபால், 20; தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நண்பர்களான இருவரும், நேற்று உசிலம்பட் டிக்கு பைக்கில் வந்து விட்டு அம்பட்டையன்பட்டிக்கு திரும்பியபோது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி அருகே, திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டியை நோக்கி வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில், இருவரும் பலியாகினர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
உசி லம்பட்டி- - மதுரை ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து நடப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.

