/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
41 மனுக்களில் 20 தள்ளுபடி; நாளை இறுதிபட்டியல்
/
41 மனுக்களில் 20 தள்ளுபடி; நாளை இறுதிபட்டியல்
ADDED : மார் 29, 2024 06:34 AM

மதுரை : மதுரை தொகுதிக்கான மனு பரிசீலனையில் 41 மனுக்களில் 20 தள்ளுபடி செய்யப்பட்டன. 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை(மார்ச் 30) இறுதிபட்டியல் வெளியாகிறது.
நேற்று தேர்தல் அதிகாரி சங்கீதா தலைமையில் மனு பரிசீலனை நடந்தது. தேர்தல் நேர்முக உதவியாளர் கண்ணன், தாசில்தார் ேஹமா உட்பட அதிகாரிகள், வேட்பாளர்கள் வெங்கடேசன்(மா.கம்யூ.,) சரவணன் (அ.தி.மு.க.,) சத்யாதேவி (நா.த.க.,) உட்பட சுயேச்சைகள் கலந்து கொண்டனர். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டதால், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் இயல்பாகவே தள்ளுபடியாகிவிட்டன. இவற்றுடன் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் என மொத்தம் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சுயேச்சை சொத்து மதிப்பு ரூ.921 கோடி
சுயேச்சையாக மனு செய்த வேல்முருகன் மீது வழக்கு உள்ளதாக கூறி, அவரது மனுவை ஏற்க மற்றொரு சுயேச்சை வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தார். எனவே வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், அவரது மனு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அதனை சரிசெய்ததால் மனு ஏற்கப்பட்டது. நேற்று முன்தினம் கடைசி ஆளாக மனுத்தாக்கல் செய்தவர் தோப்பூர் கன.வேழவேந்தன். இவரது மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதிகாரிகள் வேண்டுமென்றே தள்ளுபடி செய்வதாககூறி வாக்குவாதம் செய்தார். நீதிமன்றம் செல்வேன் என்றும் கூறினார்.
அவரது மனுவில் சொத்து மதிப்பு ரூ.921 கோடி என குறிப்பிட்டு இருந்தார். வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளைக்கே சின்னம் ஒதுக்கப்பட்டு களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

