/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
25-00 பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி
/
25-00 பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி
ADDED : செப் 27, 2025 04:19 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் மேலாண்மை கல்லுாரியில் 2500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 'பெண்மை 2025' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி இயக்குனர் முரளி துவக்கி வைத்தார். முதல்வர் செல்வலட்சுமி, பேராசிரியர்கள் மஞ்சுளா, கிருஷ்ணகுமார், பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி இன்க்யூபேஷன் மையம், கூகுள், கூகுள் டெவலப்பர்ஸ், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, சேவ் மாம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சி வீட்டுக்கு ஒரு பெண் தொழில் முனைவோர் உருவாக்குவோம்; பெண்களுக்கான முதல் வகை செயற்கை நுண்ணறிவு பயிற்சி நடத்தப்பட்டது. மாணவியர், குடும்பத்தலைவிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், தனியார் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி புதிய செயலியை உருவாக்குவதல், தொழில் சந்தையில் போட்டித் திறன் மிக்கவர்களாகவும், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில் முனைவோராவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சேவ் மாம் அமைப்பு நிறுவனர் செந்தில்குமார், ஸ்டார்ட் அப் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜ ராமநாதன், திட்ட தலைவர் சக்திவேல், கூகுள் தேடுதல் பொறியியல் திட்ட மேலாளர் அனுஜ் டுகல் மற்றும் சுவாதி தர்சனா, அஜோ ஜோசப், அபிராமி சுகுமாறன் பேசினர்.
நிர்வாகிகள் கூறுகையில், ''இம்முயற்சியானது நவீன தொழில்நுட்பத்தை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதுடன் அவர்களது திறன்களை மேம்படுத்தவும், மதுரையை சுற்றியுள்ள பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், தொழிற்சாலைகள்- கல்வி நிறுவனங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் முயற்சியாகவும் நடத்தப்பட்டது'' என்றனர்.