/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எழுத்தறிவு தேர்வில் 25,237 பேர் பங்கேற்பு
/
எழுத்தறிவு தேர்வில் 25,237 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 17, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 15 வயதுக்கு மேல் முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்காக இந்தாண்டு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 1384 மையங்களில் நடந்தது. 25,237 பேர் பங்கேற்றனர்.
தேர்வுப் பணிகளை பள்ளிசாரா வயதுவந்தோர் கல்வி இயக்குநர் நாகராஜமுருகன், சி.இ.ஓ., ரேணுகா பார்வையிட்டனர். 2022 முதல் செயல்படும் இத்திட்டத்தில், மாவட்டத்தில் இதுவரை 62,916 பேர் அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.