/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.எஸ்.எஸ்.,சின் 3 முக்கிய நோக்கங்கள்: அணிவகுப்பில் சேவைப் பொறுப்பாளர் தகவல்
/
ஆர்.எஸ்.எஸ்.,சின் 3 முக்கிய நோக்கங்கள்: அணிவகுப்பில் சேவைப் பொறுப்பாளர் தகவல்
ஆர்.எஸ்.எஸ்.,சின் 3 முக்கிய நோக்கங்கள்: அணிவகுப்பில் சேவைப் பொறுப்பாளர் தகவல்
ஆர்.எஸ்.எஸ்.,சின் 3 முக்கிய நோக்கங்கள்: அணிவகுப்பில் சேவைப் பொறுப்பாளர் தகவல்
ADDED : அக் 07, 2024 05:36 AM

புதுார்: 'மூன்று முக்கிய நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., செயல்படுகிறது'' என தமிழக, கேரள மாநிலங்களின் சேவைப் பொறுப்பாளர ரவிக்குமார் பேசினர்.
மதுரை நகர் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விஜயதசமி விழா, மாதா அகல்யா பாய் ஹோல்கர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அணிவகுப்பு கே.புதுாரில் நடந்தது. கே.புதுார் 120 அடி ரோடு யாதவா திருமண மண்டபத்தில் துவங்கிய அணிவகுப்பு புதுார் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில் நுாற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி அமோகானந்தா ஆசி வழங்கினார். பா.ஜ., தகவல் தொழில்நுட்ப மாநில துணைப் பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ரவிக்குமார் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு 99 ஆண்டுகளாக 3 முக்கிய நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது. ஹிந்துக்களுக்கு, பாரதத் தாய்க்கு அவமானம் ஏற்பட்டு விடக்கூடாது. ஹிந்துக்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். விழிப்புணர்வுள்ள சமுதாயமாக மாற்ற வேண்டும். இதற்காகவே ஆர்.எஸ்.எஸ்., செயல்படுகிறது. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கவே அணிவகுப்பு நடத்துகிறோம்.
நாம் உயரிய வாழ்க்கைக்கு 5 விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளை மனதில் இருந்து அகற்ற வேண்டும். சுற்றுச் சூழல், நீர்நிலைகளை பாதுகாத்து நீரை சேமிக்க வேண்டும். நமக்கே உரிய உணவு, பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், தாய் மொழியை பின்பற்ற வேண்டும். அரசியல் சாசனத்தை மதித்து நடக்க வேண்டும், என்றார். ஏற்பாடுகளை நகர் சங்க சாலக் மங்களமுருகன் செய்தார்.