/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரத்தில் எம்.எல்.ஏ., உட்பட அ.தி.மு.க.,வினர் 300 பேர் கைது
/
அவனியாபுரத்தில் எம்.எல்.ஏ., உட்பட அ.தி.மு.க.,வினர் 300 பேர் கைது
அவனியாபுரத்தில் எம்.எல்.ஏ., உட்பட அ.தி.மு.க.,வினர் 300 பேர் கைது
அவனியாபுரத்தில் எம்.எல்.ஏ., உட்பட அ.தி.மு.க.,வினர் 300 பேர் கைது
ADDED : அக் 08, 2025 12:47 AM

அவனியாபுரம், : மதுரை அவனியாபுரத்தில் அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவனியாபுரம்- - திருப்பரங்குன்றம் ரோட்டில் தற்காலிக ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் இடத்தில் இச்சிலை உள்ளது. நேற்றுமுன்தினம் இதை மர்மநபர் சேதப்படுத்தினார். இதை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் நேற்று காலை அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் பாலா, ஓம் சந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வினர் நேற்று காலை அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். மண்டபத்தில் அவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சந்தித்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சீண்டி பார்க்க வேண்டாம்
செல்லுார் ராஜூ கூறியதாவது: எங்களது பலம் போலீசாருக்கு தெரியும். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்கள் தலைவரின் சிலையை உடைத்த பிறகு சும்மா இருப்போம் என்று நினைக்க வேண்டாம். 50 மணி நேரத்திற்கு மேலாகியும் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களால் பாராட்டப்பட்ட காவல்துறை இன்று நாங்கள் பாராட்டும் அளவிற்கு நடந்து கொள்கிறதா. போலீஸ் கமிஷனர் தனி கவனம் செலுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.