/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்றத்தில் ரூ.37 லட்சம் இழப்பீடு
/
நீதிமன்றத்தில் ரூ.37 லட்சம் இழப்பீடு
ADDED : மார் 08, 2024 01:14 AM
மதுரை: மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்கின்றன.
திட்டப் பணிக்கு நிலத்தை அரசு கையகப்படுத்துகிறது. இது தொடர்பான வழக்குகளில் தீர்வு ஏற்பட்டு இழப்பீடு தொகையை அரசு நீதிமன்றத்தில் செலுத்துகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விழா நடந்தது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.முரளிசங்கர் பயனாளிகள் 12 பேருக்கு ரூ.37 லட்சத்து 20 ஆயிரத்து 575க்குரிய காசோலைகளை வழங்கினர். முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ராஜ மகேஷ், கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் பங்கேற்றனர்.
இழப்பீடு வழக்கில் தீர்வு ஏற்பட்டு தொகைக்கு இதுவரை உரிமைகோராமல் இருக்கும் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் மனு செய்து பயனடையலாம்.

