/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத வரி போதும்
/
உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத வரி போதும்
ADDED : ஆக 23, 2025 05:01 AM
மதுரை: அனைத்து வகையான உணவுப்பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக டில்லி ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுதல் செயலர் பங்கஜ்குமார் சிங்கை சந்தித்து மனு கொடுத்த சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
அனைத்து விவசாய விளைபொருட்கள், நேரடியாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கும் விளைபொருட்களிலிருந்து ஜி.எஸ்.டி.,யின் கீழ் விலக்கு அளிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, தயார் நிலை உடனடி உணவு, சமைக்க தயாராக உள்ளவை போன்றவற்றுக்கு 5 சதவீத வரி மட்டும் விதிக்க வேண்டும்
காகிதத்தால் தயாரான காகித பலகைகள், மாணவர் குறிப்பு புத்தகங்களுக்கு 12 சதவீத வரியும் பதிவேடுகள், டைரிகள், கம்ப்யூட்டர் எழுதுபொருட்கள், பலகை கோப்பு, உறை, காலண்டர், காகித அட்டை, காகித பைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்க வேண்டும். ஏற்கனவே ஜன.,30, ஜூலை 17 ல் இந்த கோரிக்கைகளை விவாதித்ததோடு ஆக. 13ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை சமர்ப்பித்தோம்.
வரவிருக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.