ADDED : அக் 03, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காந்தி ஜெயந்தி நாளில் மது விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து 561 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் நிலையூர், குருவித்துறை, திருமங்கலம் பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 374 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் கமுதி, தேனி, பழநி, திருநெல்வேலி மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் 8 ராணுவ கேன்டீன் மது பாட்டில்கள் உட்பட 187 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக உதயகுமார், பாஸ்கர், கணேசன், சின்னத்துரை, இசக்கிபாண்டி, திருமலைச்சாமி கைது செய்யப்பட்டனர்.