ADDED : டிச 11, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி கன்னிமார்புரம் வழியாக 58 கிராம கால்வாயின் கிளைக்கால்வாய் உசிலம்பட்டி வருகிறது. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக ஊருணி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக சம்பந்தமே இல்லாமல் கால்வாய் கரையை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்துள்ளனர்.