/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கன்வாடி பணியாளர் 65 பேர் கைது
/
அங்கன்வாடி பணியாளர் 65 பேர் கைது
ADDED : டிச 10, 2025 06:10 AM

மதுரை: மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்குவது போல அடிப்படை ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500, உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு வழங்குவது போல ரூ.15 ஆயிரத்து 700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும் உட்பட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். வேளாங்கன்னி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் மேனகா, செயலாளர் அங்காள ஈஸ்வரி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு உட்பட பலர் பேசினர். நெடுஞ்சாலைத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க நிர்வாகி வேல்முருகன், சத்துணவு அமுதா, டான்சாக் தலைவர் முத்துமோகன், நெடுஞ்சாலைத்துறை மாரி, ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தின் ஆறுமுகம், அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் மாநில செயலாளர் சோலையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

